தூர நோக்கு
ஒவ்வொரு பிரஜைக்கும் அடிப்படைத் தேவைகள் மற்றும் வறுமையின் சுமைகளிலிருந்து விடுபட்ட நாடு.
அனைவரும் செழிக்கக்கூடிய வளமான பொருளாதாரம் கொண்ட நாடு
இனம், பாலினம், சமூக நிலை அல்லது மதம் ஆகிய பாரபட்சமான பாத்திரத்தை வகிக்காது, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையர் எனும் அடையாளத்தையும், தகுதியையும் கொண்ட நாடு.
ஊழல் இல்லாத நாடு.
அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் அமைதியான, பாதுகாப்பான மற்றும் நீதியான சமுதாயத்தைக் கொண்ட நாடு.
மக்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நாடு.
பெண்களுக்கு பாதுகாப்பான, நியாயமான மற்றும் சமத்துவமான நாடு.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு.
எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நாடு
அரசியல்வாதிகளுக்கு அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் நாடு.
விழுமியங்கள்
நேர்மையான தன்மை
உள்ளடக்கிய தன்மை
ஆற்றல்
வெளிப்படைத்தன்மை
ஜனநாயகம்
நம்பகத்தன்மை
இரக்கம்
பணிவு
பொறுப்புக்கூறல்
முற்போக்கு
எங்கள் கொள்கைகள்
எமது கட்சியானது கட்சிப் போட்டியாளர்கள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுச் சொத்துப் பிரகடனத்தைக் கட்டாயமாக்குகிறது.
எங்கள் கட்சி 50% பெண் பிரதிநிதித்துவத்திற்காக பாடுபடுகிறது.
எங்கள் கட்சி 25% இளைஞர் பிரதிநிதித்துவத்திற்காக பாடுபடுகிறது.
எங்கள் கட்சி, நாட்டின் ஒவ்வொரு இனம், மதம், பாலினம் மற்றும் பிராந்தியத்தில் இருந்து வலுவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டு பன்முகத்தன்மையுடன் இருக்க முயற்சிக்கிறது.
நீதிமன்றத்தால் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட எவருக்கும் கட்சிக்குள் நியமனங்கள் அல்லது பதவிகளை தடை செய்கிறது.
கட்சியின் நிதி நிலவரங்களை பகிரங்கப்படுத்தும்.
கட்சிக்குள் உட்பட, ஆளுகையின் ஒவ்வொரு துறையிலும் வலுவான ஜனநாயக செயல்முறைகளை பயன்படுத்தும்.
தேர்தலில் பெறப்படும் அரசியல் ஆணைகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வலுவான சட்ட மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்புகளை எங்கள் கட்சி கொண்டிருக்கும்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன், ஒவ்வொரு வேட்பாளரின் தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளையும் கட்சி சரிபார்க்கும்.
எங்கள் கட்சி நமது விழுமியங்களுடன் இணைந்த புதிய அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்.
உங்கள் பங்களிப்பு
உங்களது நன்கொடைகளால் எங்களால் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இலங்கையை நம் அனைவரின் தாயகம் என்று பெருமையுடன் அழைக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சொந்தமான தேசம்.